டி.வி.பழுதாகாமல் இருக்க…
ரேடியோ டேப்ரிகார்டரை கலர் டி.வி.யின் மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் டி.வி.யில் கலர்ப் புள்ளிகள் தோன்றச் செய்யும்.
டி.வி. மேல் நட் ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவைத் தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் டி.வி. பழுதடையும்.
டி.வி.யை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும் போது டிவி.யின் பின் பகுதி திறந்த படி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
டி.வி.யின் பிரதான பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாகப் பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். டி.வி.யும் அடிக்கடி பழுதாகாது.
டெலி விஷன் நிலையத்துக்கு அருகில் வீடு இருந்தால் இன்டோர் ஆன்டனாவே (Indoor Antenna) போதும். அதிக தூரத்தில் இருந்தால் அவுட்டோர் ஆன்டனா அவசியம்.
0
Leave a Reply